இதயத்து அதிபதியாய் தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தனது 26 ஆண்டு கால நடிப்பால் 6 லிருந்து 60 வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது சீரான நடிப்பால், வீட்டில் ஓர் அங்கமாய் விளங்கிவருகிறார். 

Sanjay

சமீபத்தில் ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியொன்று வெளியானது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இதில் கவியன், ரோஹித், அஸ்வின், கோகுல் மற்றும் சஞ்சய் நடித்து அசத்தினர். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். இக்குறும்படத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் கால் பதிப்பாரா சஞ்சய் என்ற அன்பு நிறைந்த ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

Sanjay

நிகழ்ச்சி தொகுப்பாளராக சமீபத்தில் உருவெடுத்த சஞ்சய் சில நாட்கள் கழித்து Siri எனும் குறும்படத்தை இயக்கி நடித்தார். இவர் விரைவில் திரையுலகில் கால்பதித்து தனது தந்தைக்கும், தமிழ் திரைக்கும் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சயின் பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.