மலையாளத்தில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ்.தமிழில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.அடுத்ததாக சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இவருக்கு திருமணம் நிறைவடைந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.அருண் ஆண்டனி என்பவருடன் இவருக்கு அக்டோபர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கேரளாவில் நடந்த இந்த திருமணம் வைபவத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வரும் இந்த திருமண புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்