தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33,துக்லக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த வருட துவக்கத்தில் பேட்ட,சூப்பர் டீலக்ஸ்,சிந்துபாத் என்று வரிசையாக சூப்பர்ஹிட் படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.

புறம்போக்கு என்னும் பொதுவுடைமை படத்தை அடுத்து விஜய்சேதுபதி இயக்குனர் SP ஜனநாதனுடன் இணைந்திருக்கும் படம் லாபம்.ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துளளார்.தன்ஷிகா,கலையரசன்,ப்ரித்வி பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் லிங்கா,பைரவா,விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.