சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த பிகில் பட நடிகர்... செம்ம மாஸ் அறிவிப்பு இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்,mohanlal joins with super star rajinikanth in jailer movie | Galatta

தன்னிகரற்ற தனிப்பெரும் நடிகராக இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக அட்டகாசமான படங்களில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்  விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க ஸ்போர்ட்ஸ் படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். 

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க, ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அதேபோல் மலையாள சினிமாவில் இருந்து மோகன்லால் அவர்களும், தெலுங்கு சினிமாவில் இருந்து புஷ்பா ப நடிகர் சுனில் அவர்களும் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்த வரிசையில் தற்போது முன்னணி பாலிவுட் நடிகரும் தமிழில் ஆரண்ய காண்டம் மற்றும் தளபதி விஜயின் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான ஜாக்கி ஷெராஃப் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ...
 

Jackie Shroff from the sets of #Jailer 🔥

@rajinikanth @bindasbhidu @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/O9ees6RuJt

— Sun Pictures (@sunpictures) February 5, 2023

என் அம்மாவா இப்படி பேசுறது..? பிக் பாஸுக்கு பின் தனது தாயின் வரவேற்பிலும் அன்பிலும் மகிழ்ந்த ஷிவின்! வைரல் வீடியோ
சினிமா

என் அம்மாவா இப்படி பேசுறது..? பிக் பாஸுக்கு பின் தனது தாயின் வரவேற்பிலும் அன்பிலும் மகிழ்ந்த ஷிவின்! வைரல் வீடியோ

தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடியான லியோ... ஸ்வீட்டான அடுத்த அப்டேட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடியான லியோ... ஸ்வீட்டான அடுத்த அப்டேட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ!