இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் 96. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது இப்படம். ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள். மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது.

jaanu jaanu

தெலுங்கில் ரீமேக்காகும் இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. 

sharwanand jaanu

படத்தின் ட்ரைலரை தொடர்ந்து தற்போது ப்ரோமோ விடியோக்கள் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.