Indian 2 Shooting Starts In Bhopal

தமிழ் செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த தகவல் இதோ !

By | Galatta |

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு விவரம்

இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த தகவல் இதோ !  - Tamil Movie Cinema News
October 22, 2019 17:13 PM IST

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.

indian2

kamalhaasan

அனிருத் இசையமைக்கிறார். சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

indian2

bhopal

சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. ராஜமுந்திரியில் உள்ள சென்ட்ரல் சிறையில் முக்கிய காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது போபாலில் படத்தின் காட்சிகளை எடுக்கவுள்ளதாக தகவல் தெரியவந்தது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More


About This Page

People looking for online information on Kamal Haasan,Priya Bhavani Shankar,Namitha Pramod will find this news story useful.

Sony Right ad