சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா இன்று (02.01.2020) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

trajendar

தலைவராக டி.ராஜேந்தர், துணை தலைவராக டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக டி.மன்னன், இணை செயலாளராக கே.காளையப்பன், பொருளாளராக என்.பாபுராவ் ஆகியோர் பதவியேற்றனர். 

trajendar

செயற்குழு உறுப்பினர்களாக கலைப்புலி ஜி.சேகரன், கே.ராஜன், எஸ்.தியாகு, கே.கிருஷ்ணன், Bels Arts ஈ.மணி, ஏ.எம்.ஏ.மாலிக், யு.தனசேகரன் (எ) குரோம்பேட் பாபு, தங்கர்பச்சான், ஜி.சொக்கலிங்கம், எஸ்.மோகன், ஏ.வி.அரசு, ஏ.ராஜாரஹிம், ஏ.ஜி.ரகுபதி, டி.ராஜகோபாலன், யு.கிருஷ்ணமூர்த்தி, என். சந்திரன் ஆகியோர் பதவியேற்றனர்.