லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்று பெரிய அளவில் விவாதங்களும், உரையாடல்களும் சினிமா வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. இப்படியிருக்க மீண்டும் தளபதியை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கவுள்ளார் என்ற ருசிகர தகவல் கிடைத்தது. இருவரும் இணையும் இந்தப் படம் துப்பாக்கி இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் சில இணையவாசிகள் கிளப்பி விட்டனர். 

Important Update On Thalapathy 65 Shooting Plans

தளபதி 65 ஆன இந்த படம் 2021 தீபாவளிக்கு ரிலீஸாகும் என்ற செய்தியும் இணையத்தில் கிளம்பியது. இதுகுறித்து நெருங்கிய திரை வட்டாரத்தில் விசாரித்த போது, தற்போது இருக்கும் சூழல் குறித்த தெளிவான விடை சிக்கியது. ஸ்கிரிப்ட் பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள முருகதாஸ், வேறெந்த யோசனையிலும் இல்லையாம். ஊரடங்கு முழுமையாக முடிந்த பிறகே படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. 

Important Update On Thalapathy 65 Shooting Plans

தளபதி விஜய் நடிக்கும் படங்கள் தீபாவளி நாட்களில் வெளியாவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.