திரையில் புதுமையையும் புரட்சியும் செய்வது இயக்குனர்களே. அப்படிப்பட்ட இயக்குனர்கள் திரைப்படம் என்னும் கப்பலை செலுத்தும் மாலுமியாக திகழ்கின்றனர். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து சாதனையாளராக மாறியிருக்கும் இயக்குனர் Hவினோத்தின் திரை பயணம் பற்றிய பதிவு தான் இது. இப்பதிவில் கலாட்டாவுடன் வினோத் பகிர்ந்து கொண்ட சினிமா சுவாரஸ்யங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

ajith

திரைக்கதையில் நிபுணரான வினோத், திடீரென ரீமேக்கில் இறங்கியது ஏன் ?

அஜித் சார் சொன்னார்கள் என்று தான் இதில் இறங்கினேன். ஆரம்பத்தில் தயங்கினேன். இதுபோன்ற படம் எப்படியென்று ? இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுகொண்டு படத்தை பார்க்கத்துவங்கினேன். பின் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று அஜித் சார் இந்த முடிவு எடுத்துள்ளார் என்பது தெரிந்தது. இதற்காக நாங்கள் மேற்கொண்ட பார்வையே நேர்கொண்ட பார்வையாக வந்தது.

ஒரிஜினல் பிங்க் வெர்ஷனுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கும் ?

அதில் அமிதாப் நடித்திருப்பார். இதில் சில இடங்களில் அஜித் சாருக்கு, அவர் வயதிற்கு ஏற்றார் போல் மாற்றியிருக்கிறோம். குறிப்பாக அஜித் சாரின் ஆக்ட்டிங் பாட்டர்னிற்கு சரிவரும் விஷயத்தை கையாண்டுள்ளோம்.

உச்ச நட்சத்திரம் அல்லது சிறிய நட்சத்திரம் ? எப்படிப்பட்ட நடிகர்களை இயக்குவது வசதியாக இருக்கிறது ?

இரண்டு தரப்பு நட்சத்திரங்களும் வசதியாக தான் இருந்தது. எளிமையும் கூட. வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து திரையில் பார்க்கும் போது மிகப்பெரிய ஜாம்பவான்களாக தெரிவார்கள். எந்த பிழையும் வரக்கூடாது என்றெல்லாம் நினைத்திருப்போம். ஆனால் அருகில் இருந்து பார்த்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். நம் மனதில் இருக்கும் பதட்டை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வர். நான் இதுவரை பணிபுரிந்த மூன்று நாயகர்களான நட்டி, கார்த்தி, அஜித் என அனைவரும் அப்படிதான். அதனால் தான் அவர்கள் உச்ச நிலையில் உள்ளனர்.

nerkondavinth

சதுரங்கவேட்டை, நேர்கொண்ட பார்வை இந்த இரு படங்களில் எதில் அதிகம் கற்றுக்கொண்டீர்கள் ?

நேர்கொண்ட பார்வையில் தான். ஏனென்றால், இன்னொருவர் எடுத்த படத்தை நான் இயக்கும் போது, ஒரு மீடியேட்டராக தான் இருக்கிறேன். இதில் தான் அதிகம் கற்றுக்கொண்டேன்.

ajithpistol

பிஸ்டல் போட்டிகளில் அஜித் சாரை அதிகம் காண முடிகிறது.. தல 60-ல் துப்பாக்கி சுடுதல் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏதாவது இருக்குமா ?

நிச்சயம் இல்லை. ஆரம்பத்தில் நான் அஜித் சாரிடம் கூறிய ஸ்கிரிப்ட்டில் இதுபோன்ற விஷயம் வைத்து கூறியிருந்தேன். அப்போது அவர், வழக்கமாக ஹீரோக்கள் செய்வது தான். அதுபோன்ற விஷயங்கள் வேண்டாம் என்றார். மேலும் அவரை நேசிக்கும் மக்களுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். உதாரணத்திற்கு சமீபத்தில் கல்லூரிக்கு சென்று ஏரோ மாடலிங் கற்றுத்தந்தார்.

தளபதியை சந்தித்து கதை சொன்னீர்கள் என்று கேள்வி பட்டோம்.. நிஜமா ?

உண்மை தான். தளபதிக்கு ஏற்ற சிறப்பான கமர்ஷியல் கதையை கூறினேன். பணிபுரிவது குறித்து அவர் தான் கூறவேண்டும். சினிமாவில் அனைத்து படங்களும் கமர்ஷியல் தான். உதாரணத்திற்கு ஒரு பொருளை விற்றால் அது கமர்ஷியல் தானே.

ஹிப்-ஹாப் ஆதிக்கும் கதை சொன்னதாக கேள்விப்பட்டோம் ... அதுபற்றி கூற இயலுமா ?

என்னுடைய துணை இயக்குனர் தான் படம் செய்கிறார். கதை மற்றும் வசனம் என்னுடையது தான். இன்னும் ப்ராஜெக்ட்டாக மாறவில்லை.

கைவசம் எத்தனை ஸ்கிரிப்ட் வைத்துள்ளீர்கள் ?

கடையா வைத்துள்ளேன்..(சிரித்தபடி) அனைத்து இயக்குனர்களிடம் கதைகள் அதிகமாக இருக்கும். அதை மற்றும் திறன் கதாநாயகர்களிடம் தான் உள்ளது. ஒரு ஹீரோ ஆமாம் என்று கூறும் வரைக்கும் அது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாது. வெற்றி தோல்வியை ருசித்த நாயகருக்கு எதுவரும், எது வராது என்பதை தெரிந்து அதற்கு ஏற்றார் போல் உருவாக்க வேண்டும். ஸ்கிரிப்ட்டிற்கும் ஐடியாவிற்கும் வித்தியாசம் உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ?

முப்பது வருடங்களுக்கு முன்னாள் இருந்த பெண்கள் இப்போது இல்லை. ஆண்களுக்கு சரிசமமாக பணிகள் செய்கின்றனர். பெண்கள் சுதந்திரம், அவர்கள் மீது ஏற்படும் வன்முறைகள் போன்றவை பற்றி பேசியாக வேண்டும். இதுபோன்ற விஷயங்களை தமிழகமும், கேரள மாநிலங்களும் தான் பேசுகிறோம். உண்மை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துக்கூறுவது சீரான முயற்சியே.

அஜித் ரசிகர்களுக்கு நேர்கொண்ட பார்வை எப்படிப்பட்ட படமாக இருக்கும் ?

நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்தவாரு இருக்கும். நானும் ஓர் ரசிகன் தானே. பிடிக்கும் என நம்புகிறேன்.

வித்யா பாலன் ஏன் ?

சிறிய நேரமாக இருந்தாலும் சீரான திரை இருப்பு இருக்கவேண்டுமென்று தான் வித்யா பாலன்.

தல 60-ல் வினோத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் ?

மூன்று ஸ்கிரிப்ட் பேசிக்கொண்டிருக்கிறோம். நேர்கொண்ட பார்வை படத்தின் ரெஸ்பான்ஸ் வைத்து தான் எந்த கதை என்று முடிவு செய்யவிருக்கிறோம். ஆனால் நிச்சயம் ஆக்ஷன் படம் தான்.

Hvinoth

இப்படிப்பட்ட கலைத்தாகம் நிறைந்த கலைஞனுடன் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. இவர் திரைத்துறையில் பல வெற்றிகளை குவிக்க கலாட்டா சார்பாக வேண்டுகிறோம்.