பாலிவுட்டில் சிறந்த நடிகைகளில் ஒருவர் ஹூமா குரேஷி. பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், பத்லாபூர், ஹைவே உள்ளிட்ட படங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவர்ந்தன. படங்கள் தவிர்த்து வெப்-சீரிஸ், குறும்படங்கள் என நடித்து வருகிறார். 

Huma Qureshis Shares Her Lockdown Dance Video

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கை அறிவித்தது. வீட்டிலேயே மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்தாலும், வெளி உலகை காணாமல் பலர் அவதி படுகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். 

Huma Qureshis Shares Her Lockdown Dance Video

இந்நிலையில் ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஊரடங்கு முடிந்துவிட்டது என்று சொன்னால், இப்படிதான் நடனமாடுவேன். எப்போது அந்த கால் வருமோ..? என பதிவிட்டுள்ளார். ஹூமா குரேஷியின் இந்த அழகிய நடனம் இணையத்தை அசத்தி வருகிறது.