ஷூட்டிங்கை நிறைவு செய்த ஹிப்ஹாப் தமிழாவின் அன்பறிவு படக்குழு !
By Aravind Selvam | Galatta | October 10, 2021 15:28 PM IST
இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.அடுத்ததாக தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.
இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.ஹீரோவானாலும் தொடர்ந்து வேறு படங்களுக்கு இசையமைப்பதையும் தொடர்ந்து வந்தார்.
இவர் நடித்து இயக்கிய சிவகுமாரின் சபதம் படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வின் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் அன்பறிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்து பிரபலமான காஷ்மீரா இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.
நெப்போலியன்,ஊர்வசி,விதார்த்,தீனா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்த்துள்ளது என்று படத்தின் நாயகி காஷ்மீரா சில புகைப்படங்களோடு பகிர்ந்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.