தெலுங்கு சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் நாகர்ஜுனா.மன்மதுடு 2 என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.நாசர்,லக்ஷ்மி,தேவதர்ஷினி,அக்ஷரா கவுடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்,சமந்தா இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் தோன்றுகின்றனர்.சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.RX 100 படத்திற்கு இசையமைத்த சைத்தன் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இந்த படத்தின் ஹே மெனினா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.