தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் மனிதன். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மாத்யூ ஹேடன் தளபதி விஜய் பற்றி பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்று இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அவரது பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் தோனி. இந்த புகைப்படம் என்னுடைய ஃபேவரைட்டான புகைப்படம். இதில் விஜய் சந்திரசேகர் உள்ளார். சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என பதிவு செய்துள்ளார் ஹேடன். இதன் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். 

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் அணிகள் துவங்கிய போது சென்னை அணியின் தூதராக தளபதி விஜய் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பிரபலமாவதற்கு இதுவும் ஒரு காரணம். அந்த சீசனில் நடக்கும் போட்டியை காண தளபதி விஜய் தன் மகன் சஞ்சய்யுடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வருவார். மேட்ச் முடிந்து CSK அணி வீரர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்றுவரை வைரலாகி வருவதில்லாமல் மலரும் நினைவுகளாக உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

இதைத்தொடர்ந்து AR முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ஸ்கிரிப்ட் பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள முருகதாஸ், ஊரடங்கு முழுமையாக முடிந்த பிறகே படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.