3 திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆயிற்று. பள்ளி பருவ காதல், இறுதி வரை உடனிருக்கும் நண்பர்கள், உணர்வுபூர்வ காட்சிகள் என நேசிக்கவைக்கும் விஷயங்களை பதிவு செய்திருப்பார் இயக்குனர் ஐஸ்வர்யா R தனுஷ். இந்த படம் தான் ராக்ஸ்டார் அனிருத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. பாடல் மற்றும் பின்னணி என பின்னி பெடலெடுத்திருப்பார்.

dhanush

இந்த படத்தில் தனுஷ் பாடிய Why This Kolaveri பாடல் உலகளவில் வைரலாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலை இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் பாடுகிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்படுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது நாம் அறிந்தவையே. இவர் தனுஷ் பாடல் பாடியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

hardik

நடிகர் தனுஷ் கைவசம் அசுரன், பட்டாஸ், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லண்டனில் துவங்கவுள்ள படம் என வரிசையாக படங்கள் உள்ளது. மேலும் இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ராம்குமார், செல்வராகவன் என அசத்தல் லைன்-அப் உள்ளது.