இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அபிமானம் பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும் விளங்கியவர். இந்தியாவிற்க்காக பல டெஸ்ட், ஒருநாள்  டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன்சிங் கிரிக்கெட்டில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஹர்பஜன்சிங் . அவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரணடிண்ட்ஷிப் திரைப்படத்தில் KPY பாலா, சதீஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.சேன்ட்டோ ஃபிலிம்ஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்திற்கு சி.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி பிரண்ட்ஷிப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இன்று பிரண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியானது. விறுவிறுப்பான இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.