ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் திரைப்படம் மஹா. இதில் நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடிக்கிறார். STR மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் கோவாவில் படமாக்கப்பட்டது.

maha

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. STR மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, பிரேக்-அப், மீண்டும் சேருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பவுள்ளது என சமீபத்தில் தெரியவந்தது.

maha maha

படம் 80 % சதவீதம் முடிவடைந்ததாக தெரியவந்தது. இந்த மாதம் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளனர் படக்குழுவினர். 2020 மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. STR-ன் நான்கு நாள் கால்ஷீட் மீதம் உள்ளது என தயாரிப்பாளர் மதியழகன் கலாட்டா நேர்காணலில் தெரிவித்தார்.