குக்கூ, ஜோக்கர் போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைதிருக்கிறார். நடாஷா சிங் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். குதிரை வைத்து வித்தை காட்டும் கலைஞராக நடித்துள்ளார் நடிகர் ஜீவா. பத்திரிக்கையாளர்களுக்காக நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 

gypsy gypsy

இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது.   

jiiva gypsy

மார்ச் 6-ம் தேதியான நாளை வெளியாகும் இந்த படத்தின் மூன்றாம் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியானது. முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடாஷா சிங்.