தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர் என்பதை கடந்து மனதிற்கு இனிமையான பாடல்களை தந்த இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இன்று வரை ஃபுல் ஃபார்மில் உள்ளார். பொல்லாதவன், மதராசப்பட்டினம், தலைவா, மயக்கம் என்ன என இவரது படைப்புக்கள் ஏராளம். 

suriya

நடிகர் சூர்யா வைத்து வெற்றிமாறன் சூர்யா 40 என்ற படத்தை இயக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அசத்தியது. இந்த காம்போவை திரையில் பார்த்து ரசிக்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர் சினிமா விரும்பிகள். இந்த படத்தின் படப்பிடிப்பு சம்மர் 2020-ல் துவங்கும் என்ற செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. தற்போது இதன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது தெரியவந்தது. இந்த படம் ஜிவி பிரகாஷுக்கு 75-வது படமாகும். 

gvprakash

இறுதியாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றது. கிடைக்கும் கேப்பில் நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் வெளியாகின.