ஆயிரம் ஜென்மங்கள் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | October 07, 2019 18:51 PM IST

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இவரது 100% காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இவர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார்.
ஈஷா ரெப்பா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சதிஷ்,ஆடுகளம் நரேன்,வையாபுரி,மனோபாலா,நிகேஷா படேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சி சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.திகில் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.