வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vaibhav Sixer

Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.இந்நிலையில் இந்த படக்குழுவினருக்கு பிரபல காமெடியன் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Vaibhav Sixer

தன்னுடைய அனுமதி பெறாமல் தனது புகைப்படத்தையும்,வசனத்தையும் படக்குழுவினர் உபயோகித்துள்ளனர் என்றும்.தன்னை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நோட்டீஸில் கவுண்டமணி தனது வக்கீல் சசிகுமார் மூலம் அனுப்பியுள்ளார்.இந்த காட்சியை உடனே நீக்கவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Goundamani Notice Sixer

Goundamani Notice Sixer

Goundamani Notice Sixer