ஹிப்ஹாப் தமிழாவுக்காக பாடல் பாடிய ராணா ப்ரோமோ வெளியீடு !
By Aravind Selvam | Galatta | November 13, 2019 19:14 PM IST

அயோக்யா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் ஹீரோவாக நடித்து வரும் படம் ஆக்ஷன்.இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார்மதகஜராஜா,ஆம்பள படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் கூட்டணி வைக்கிறார் சுந்தர் சி.தமன்னா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகி பாபு,ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் பிரபல ஹீரோ ராணா டகுபாடி ஒரு பாடலை பாடியுள்ளார்.இந்த பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.