இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்கிற மகளும், ஓம்கார் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து கீதாஞ்சலி தன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், மூன்றாவது குழந்தை...லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் ஜனவரி ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். மெடர்னிட்டி ஜீன்ஸ் எவ்வளவு சவுகரியமானது என்பதே மறந்துவிட்டது. நான் ஃபிட்டாக உணர்கிறேன். ஆரோக்கியமாக மற்றும் ஹாட்டாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார் கீதாஞ்சலி. 

கீதாஞ்சலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஜனவரியில் குட்டி செல்வா அல்லது குட்டி கீதாஞ்சலியை காண ஆவலாக உள்ளோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிறந்த இயக்குனரான செல்வராகவன், இந்த லாக்டவுனில் நடிகராகவும் களமிறங்கவிருக்கும் செய்தியை அறிவித்தார். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வா. இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் இருவரின் கையில் அருவா மற்றும் துப்பாக்கி உள்ளது. சிவம் சி. கபிலன் இந்த போஸ்டரை வடிவமைத்திருந்தார். யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.