STR நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.  தற்போது பிரபுதேவா வைத்து பஹீரா படத்தை இயக்கி வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

bagheera

பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டது. மொட்டையடித்த கெட்டப்புடன் பிரபுதேவா இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாகியது. கணேசன் சேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். 

Gayathri

தற்போது நடிகை காயத்ரி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி தெரியவந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகிய காயத்ரி, சூப்பர் டீலக்ஸ், கே-13 என வரிசையான ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். அனேகன் படத்தில் நடித்த அமைரா தாஸ்தூரும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.