தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் விவகாரம் ஒரு புறம் இருந்தாலும், துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் சிபிராஜ் நடிக்கும் வால்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். பஹாத் ஃபாஸில் நடிக்கும் ட்ரான்ஸ் படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

gauthammenon

தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் கௌதம். மதிமாறன் இதற்கு முன் இயக்குனர் வெற்றிமாறனின் அசோசியேட்டாக பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல்.

gvprakash

கே ப்ரோடக்ஷன்ஸ் ராஜாராஜன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று துவங்கியது. வர்ஷா பொல்லமா மற்றும் வாகை சந்திரசேகர் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். அண்ணனுக்கு ஜே படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ரங்கசாமி இதில் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

gauthamvasudevmenon