மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனாக இருந்தாலும், தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், இவன் தந்திரன் போன்ற படங்களில் இவர் நடித்தாலும் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

gauthamkarthik

இவரது நடிப்பில் கடைசியாக தேவராட்டம் திரைப்படம் வெளியானது. முத்தய்யா இயக்கத்தில் வெளியான இந்த படம் தென் மாவட்டங்களில் வெற்றி நடை போட்டது. தற்போது STR உடன் மஃப்டி ரீமேக்கில் நடித்து வருகிறார்.  

gauthamkarthik Gauthamkarthik

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் கௌதம் கார்த்திக் வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்துவருகின்றார். இதில் ஆளே மாறி போய் கட்டுடலுடன் இருக்கிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒர்க்-அவுட் செய்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.