'தமிழ் சினிமா' பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து சாதனையாளராக மாறியிருக்கும் குறும்பட இயக்குனர் மற்றும் எடிட்டரான ரிச்சர்ட்டின் திரை பயணம் பற்றிய பதிவு தான் இது. 

Galatta Special Article For Norway Film Festival Award Winner Richard

இன்றிருக்கும் காலவேகத்தின் மூன்றாம் கண் போல் திகழ்வது குறும்படம். படம் பார்க்காதவர்களை கூட இணையதள வசதியால் வியக்கவைக்கும் திறன் கொண்டது. குறும்படத்தில் கால் பதித்த பல கலைஞர்கள் இன்று உச்ச நட்சத்திரங்களை இயக்கும் இயக்குனர்களாய் வளர்ந்து நிற்கின்றனர். முதல் குறும்படத்திலே விருது என்பது முதல் மேட்ச் சென்ட்யூரி என்றே கூறலாம். அப்படி கடல் கடந்து நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பெருமை சேர்த்திருக்கிறார் ரிச்சர்ட்.

Galatta Special Article For Norway Film Festival Award Winner Richard

விருது வாங்கிய பிறகு நீங்க கூறிய வார்தைகள் ?

எல்லோருக்கும் வணக்கம் மிகவும் சந்தோஷமா இருக்கிறது. ஓர் இயக்குனராக முதல் படைப்பிலேயே ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றது தன்னம்பிக்கையையும் தருகிறது. இது ஸ்பெஷலான ஒரு விருது காரணம் காக்கா முட்டை மணிகண்டன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குனர்கள் சிறந்த டைரக்டர் விருதை இங்குதான் வாங்கினர். அதனால் அந்த பெயரை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

ஏதாச்சு கதை ரெடியா இருக்கா ? ஸ்பாய்லர்ஸ் இல்லாம அதை பற்றி கூற முடியுமா ?

இருக்கு... ஒர்க் பண்ணிட்டு தான் இருக்கேன். அந்த ஸ்கிரிப்ட் எனக்கு முழு திருப்தியையும், வணிகரீதியாக ஒரு பெரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஸ்கிரிப்ட் முடிந்ததும் தயாரிப்பாளரை அணுகுவது குறித்து யோசிக்க வேண்டும்.

Galatta Special Article For Norway Film Festival Award Winner Richard

நம்ம ஊரில் இருந்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் வந்திருந்தாரே, சந்திச்சிங்களா ?

அருண்ராஜா காமராஜ் கனா படத்துக்காக விருது வாங்க வந்திருந்தார். என்னுடைய படம் ஸ்க்ரீனிங் செய்யும் நேரத்தில் பார்த்துவிட்டு, சூப்பராக இருக்கிறது என்று மனதார வாழ்த்தினார்.

சினிமா லைஃப் எப்படி இருக்கு ?

நல்லா போகுது, விழுப்புரம் டு விருகம்பாக்கம் வந்து ரசிகர்களுக்கு பிடிச்ச விஷயத்தை தரும்போது சந்தோஷமா இருக்கு.

Galatta Special Article For Norway Film Festival Award Winner Richard

ஹலோ நான் கலாட்டா நிருபர் சக்தி பிரியன் பேசுறேன்-ல் துவங்கி, இறுதி கான்வெர்சேஷன் வரை சினிமா மேல நீங்க வச்சிருக்க காதல் பத்தி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. பேஸ்புக்கில் ஆக்டிவா இருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஆசியா புக் சாதனையாளராக விளங்கும் ரிச்சர்டின் திரை பயணம் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.