பிரான்ஸ் நாட்டில் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் முதல் காட்சியில், நாயகியுடன் கள்ளத் தனமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது, படுக்கையில் உடன் இருந்த ஆண் நண்பர் ஒருவர் இறந்துவிடுவார். இதேபோல், பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

sex business trip

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செயல்பட்டு வரும் TSO என்ற ரயில்வே சேவை நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய சேவியர் எக்ஸ் என்பவர், வேலை நிமிர்த்தமாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியூர் சென்றபோது, அங்கு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி உள்ளார். அப்போது, முகம் தெரியாத ஒரு பெண்ணுடன், அவர் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று அவர் இறந்துபோனார்.

sex business trip

இதுதொடர்பாக சேவியர் எக்ஸ் பணியாற்றிய நிறுவனம், அவருக்கு இழப்பீடு வழங்க மறுத்தது. மேலும், இது கள்ளத்தனமான உறவு என்பதால், இழப்பீடு தர முடியாது என்று தெரிவித்துவிட்டது. இது தொடர்பாக சேவியர் எக்ஸின் குடும்பத்தினர் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

sex business trip

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது 'Workplace Accident'(பணியிட விபத்து) என்று தெரிவித்துள்ளது. மேலும், சேவியர் எக்ஸ் தான் சென்ற வேலையைச் சரியாக நிறைவேற்றினார் என்றும், பிரெஞ்சு சட்டத்தின் கீழ், வேலை தொடர்பாக எங்குச் செல்ல நேர்ந்தாலும், அங்கு விபத்து ஏற்பட்டால், அது பணியிட விபத்து தான் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், உயிரிழந்த சேவியர் எக்ஸிக்கு, அவரது நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.