பொதுவாக கார்த்திக் சுப்பராஜ் படம் என்றால் குறும்பட சாயல், சஸ்பென்ஸ் நிறைந்த இரண்டாம் பாதி, மஞ்சள் லைட் கொண்ட நைட் ஷாட்ஸ், திரையோரம் ஒலிக்கும் பாசமலர் படத்தின் மலர்ந்தும் மலராத பாடல், ஏதாவது ஒரு ஷாட்டில் சூப்பர்ஸ்டார் ரெஃபரன்ஸ் என பல அம்சங்கள் இருக்கும். கடந்த 2014-ம் ஆண்டில் அவர் இயக்கத்தில் வெளியான படம் ஜிகர்தண்டா. 

நடிகர் சித்தார்த் மற்றும் அப்போது பீக்கில் இருந்த நடிகை லக்ஷ்மி மேனன் கொண்ட போஸ்டர்கள் படம் வருவத்திற்கான அறிகுறியை தெரிவித்தது. பிறகு வெளியான போஸ்டரில் மீசை, தாடியுடன் பாபி சிம்ஹா தனியாக தெரிந்தார். ஜிகர்தண்டா எனும் தலைப்பு, மதுரை பக்கம் மட்டுமே நன்றாக ஓடும் என சிலர் கூறிவந்த நேரம் அது.

படத்திற்கு வருவோம், தயாரிப்பாளரின் ரசனைக்கு ஏற்ப கேங்ஸ்டர் படமெடுக்க வேண்டுமென்று காவல் அதிகாரிகள் மற்றும் தெரிந்த பத்திரிக்கை நண்பர்களை தேடி அலைகிறார் வருங்கால இயக்குனர் கார்த்திக். ஒருத்தன் இருக்கான்பா, நீ எதிர்பார்ப்பது போல்.. பேரு அசால்ட் சேது.. ஊரு மதுரை.

இந்த வசனத்தை சொன்னவுடன், சந்தோஷ் நாராயனின் பின்னணி வேற லெவல செவிக்கு விருந்தளிக்கும். தனியாக மதுரையில எப்படி என்று யோசிக்கும் போது நண்பர் ஊர்னி ஞாபகத்துக்கு வருவார். நண்பருடன் சேர்ந்து சேதுவை பின்தொடரும் கார்த்தி, எப்படி பட்ட பிரச்சனைகளை மேற்கொள்கிறார். மதுரையில் அவர் சந்திக்கும் கேரக்டர்கள் பற்றி தான் படத்தின் முதல் பாதி.

சேதுவின் இரண்டு டைமென்ஷெனை படத்தில் காணலாம். அசால்ட் சேதுவாகவும், அ(அழுகுணி)குமாராகவும் வந்து சிறப்பான சம்பவம் செய்திருப்பார் பாபிசிம்ஹா. ஒருத்தனுக்கு சம்பவம் தான் கெத்தே. நாம வாழனும், செம்மயா வாழ்ந்தான்டா மாதிரி வாழனும். இதெல்லாம் தான் சேதுவின் பாலிஸி. கயல்விழியின் காதலில் தப்பித்தவன் கூட பெட்டிக்கடை பழனியிடம் இருந்து விடுபட முடியாது என்றே கூறலாம்.

டைட்டானிக் மாஸ்க் போட்டு கொலை செய்வது, கிணற்று அடியில் பாடும் மதுரை ஆன்தம், மாஸான மண்வாசனை பாடல்கள் இப்படி அதிகமான விஷயங்கள் நிரம்பி வழிந்தாலும், படத்தின் வெற்றி உறுதியான இடம் எங்கே தெரியுமா ? இயக்குனர் கார்த்திக்கை பார்த்து மணிரத்னம் தொலைபேசி நம்பரை கேட்பார் கலைஞன் சேது.

படம் திரைக்கு வந்து இன்றோடு ஐந்து வருடங்கள் ஆயிற்று. இப்படிப்பட்ட ருசி நிறைந்த ஜிகர்தண்டாவை பருக கலாட்டா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.