கல்கி எழுதிய புகழ் பெரும் பொக்கிஷமான வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இதை படமாக்க பலர் முயற்சித்துள்ளார்கள், ஆனால் இது பெரிய காவியம் என்பதால் சுறுக்கி அமைக்க முடியவில்லை. சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றே கூறலாம்.

இயக்குனர் மணிரத்னம் கூட இதை படமாக்க முயற்சி செய்ததாக பேசப்பட்டு வருகிறது. இப்போது பொன்னியின் செல்வன் டிஜிட்டல் வெப் சீரிஸாக உருவாகவிருக்கிறது. அதை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார். தயாரிப்பு பணிகளில் இருக்கும் இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாகவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fantabulous Novel Ponniyin Selvan To Be Feature As WebSeries In Soundaryas Production

சிறந்த இயக்குனர் அல்லாது அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்ப பணிகளில் சிறந்து விளங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ் தயாரிப்பதை வாழ்த்துகிறது நம் கலாட்டா.