இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன், முன்னேறுபவர்களின் மோட்டிவேஷன்.... இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் சிவகார்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் என தனது நடிப்பால் ஈர்த்து வருகிறார். எதார்த்த நாயகனாக திரையில் தோன்றுவதே சிவகார்திகேயனின் சிறப்பு. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்தவர் இவர். இவர் ஹீரோவாக தற்போது நடித்து வரும் படங்கள் டாக்டர் மற்றும் அயலான். 

டாக்டர் படத்தை SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் லாக்டவுனில் எடிட்டிங் பணிகள் நடந்து வந்தது. கடைசியாக படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

அநேகமாக இந்த லாக்டவுனில் பல நல்ல ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார் சிவகார்த்திகேயன். இன்று சிவகார்த்திகேயனின் தந்தை திரு. தாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, SK ரசிகர்கள் பல வரைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதில் சிவகார்திகேயனும், அவரது தந்தையும் ஒன்றாக இருப்பது போல் வரைந்துள்ளனர். இதிலிருந்தே சிவகார்த்திகேயன் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு தெரிகிறது. 

சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் அவர்கள், திருச்சி மத்திய சிறையில் கைதிகளைக் கண்காணிக்கும் பிரிவில் பணியாற்றியவர். நேர்மையான காவல் அதிகாரியான இவரை பற்றி பல தருணங்களில், பல மேடை நிகழ்ச்சியில் சிவகார்திகேயன் கூறியிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாளில் HBDdossAppa என்ற டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்துள்ளனர். இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை தோல்விகள் இவருக்கு இல்லை.. இவர் தான் என்றும் நம்ம வீட்டு பிள்ளை.