தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Dhanush GVM ENPT

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பல காரணங்களால் பல முறை தள்ளிபோன இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் இன்றும் இந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.

Dhanush GVM ENPT

இது குறித்த அறிக்கையை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடைசி வரை முயற்சி செய்தும் எங்களால் இன்று படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை சில நாட்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

Dhanush GVM ENPT

மேலும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் எங்களுடன் இருந்த ரசிகர்கள் இப்போதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் உங்கள் காத்திருப்புக்கு நிச்சயம் இந்த படம் பரிசாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Dhanush GVM ENPT