விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்த அஸ்வின் குமார், தொடர்ந்து சின்னதிரையில் முன்னணி மெகா தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த ஓ மணப்பெண்ணே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஸ்வின்குமார்.

இதனையடுத்து ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ள என்ன சொல்லப் போகிறாய் படத்தில் அஸ்வின் குமார் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். தேஜு ஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா கதாநாயகிகளாக நடிக்க, விஜய் டிவி புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் விவேக் மற்றும் மெர்வின் இணைந்து இசையமைத்துள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகியிருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்திலிருந்து கலக்கலான டீசர் மற்றும் முதல் பாடலாக ஆசை பாடல் வெளிவந்தது.

தொடர்ந்து விவேக் மற்றும் மெர்வின் இசையில் தெருக்குரல் அறிவு வரிகளில் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் பாடிய கியூட் பொண்ணு பாடலும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், என்ன சொல்ல போகிறாய் படத்தின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியானது.அந்த ட்ரைலர் இதோ…