ஈரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அறிவழகன்.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த வல்லினம்,ஆறாது சினம்,குற்றம் 23 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

Eeram 2 Script is Ready Director Arivazhagan

இதனை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் AV 31 படத்தை இயக்கிவருகிறார்.கலாட்டாவுடன் லைவில் வந்த இயக்குனர் அறிவழகன்,ஈரம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Eeram 2 Script is Ready Director Arivazhagan

ஈரம் ரிலீசாகி 10 நாட்களிலேயே எனக்கு ஈரம் 2 குறித்த கதைக்களம் கிடைத்துவிட்டது.முதல் பாகத்திற்கு சம்மந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.மேலும் முதல் பாகத்தை தயாரித்த தன்னுடைய குரு இயக்குனர் ஷங்கர் தயாரித்தால் தான் ஈரம் 2 எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.தான் இயக்குனர் ஆனதற்கும்,ஈரம் படத்திற்கும் அவர் தான் கரணம் அதனால் அவர் இல்லாமல் இந்த படம் எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.