தளபதி விஜயின் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?  எடிட்டர் பிரவீன்KLன் பிரத்யேக பேட்டி இதோ

வாரிசு பட நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசிய எடிட்டர் பிரவீன்KL,editor praveen kl about thalapathy vijay in varisu movie deleted scenes | Galatta

உச்ச நட்சத்திரம் நாயகராக தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் தளபதி விஜயின் திரைப்யணத்தில் அடுத்த பிளாக்பஸ்டர் படமாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வாரிசு திரைப்படம் ரிலீஸானது. இயக்குனர் வம்சி பைடிபலுலி இயக்கத்தில் உருவாக்கியுள்ள வாரிசு படத்தை பிரபலத்திலிருந்து தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார்.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன்.KL அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து விவரித்த படத்தொகுப்பாளர் பிரவீன்.KL அவர்கள், 

"முதலில் நடிகை குஷ்பூ மேடம் மற்றும் நடிகர் ஜான் விஜய் சார் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் அவர்கள் நடித்துள்ள அந்த பகுதி மிக நன்றாக இருந்தது. இது படத்தின் முதல் பாதியில் இடம் பெற வேண்டியது. ஆனால் படத்தை ஒரு குறிப்பிட்ட நீளத்திற்குள் வைப்பதற்கு மிகுந்த சவாலாக இருந்த காரணத்தினால் இதுவா அதுவா என்ற ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட பகுதியை  நீக்க வேண்டியதாகிவிட்டது.  சொல்லப்போனால் தளபதி விஜய் உடன் குஷ்பூ இருக்கக்கூடிய புகைப்படங்கள் கூட அப்போது தயாராகிவிட்டது. ஆனால் சில படங்களில் நாம் இப்படி முடிவெடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் ஒரு விஷயத்திற்காக நான் குஷ்பூ மேடம் நன்றி தெரிவித்தே ஆகவேண்டும் படத்திற்கு என்ன தேவையோ எது சரியோ அதை செய்யுங்கள் என வம்சி சாரிடம் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். முக்கியமாக நீக்கப்பட்ட காட்சிகள் என்று சொல்ல வேண்டுமென்றால் அது குஷ்பூ அவர்கள் நடித்ததும் ஜான் விஜய் அவர்கள் நடித்த பகுதிகளும் தான். அது தவிர சொல்ல வேண்டுமென்றால் உதாரணத்திற்கு ஒரு காட்சி 5 நிமிடத்திற்கு இருக்கும் ஆனால் அந்த காட்சியை இரண்டரை நிமிடத்திலேயே அழகாக சொல்லி விட முடியும் என்றால் மீதி இரண்டரை நிமிடம் தேவையில்லை தான். அப்படிதான் குறைக்கப்பட்டது. ஆனால் இது மிகவும் ஒரு கடினமான முடிவு தான். ஏனென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக நிறைய விஷயங்கள் மெனக்கெட்டு செய்யப்பட்டிருக்கும் நிறைய பணம் செலவிடப்பட்டு இருக்கும் அதிகப்படியான உழைப்பை ஒவ்வொருவரும் கொடுத்திருப்பார்கள்.  ஒளிப்பதிவாளர் குறைந்தது 15 லிருந்து 20 நாட்கள் அந்த பகுதியை படமாக்க உழைத்திருப்பார். அந்தப் பகுதி குஷ்பூ அவர்களை சுற்றி நடைபெறும் விஷயமாக தான் இருக்கும். அதை நான் இப்போது முழுமையாக தெரிவித்து விட முடியாது. அந்தப் பகுதியை மீண்டும் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இணைக்கும் திட்டம் இருக்கிறது. இல்லையென்றால் ஒருவேளை யூட்யூப்பில் ரிலீஸ் ஆகலாம்" 

என தெரிவித்துள்ளார். படத்தொகுப்பாளர் பிரவீன்.KL அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

தந்தையுடன் படம் பார்த்து எமோஷ்னலான வாரிசு இயக்குனர் வம்சி... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

தந்தையுடன் படம் பார்த்து எமோஷ்னலான வாரிசு இயக்குனர் வம்சி... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

தனுஷின் வாத்தி பட கொண்டாட்டத்திற்கு ரசிகர்களை அலர்ட் செய்த படக்குழு-ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு பதிலடி அறிவிப்பு!
சினிமா

தனுஷின் வாத்தி பட கொண்டாட்டத்திற்கு ரசிகர்களை அலர்ட் செய்த படக்குழு-ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு பதிலடி அறிவிப்பு!

தனுஷின் வாத்தி தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா - அடுத்த அதிரடி பட மிரட்டலான அறிவிப்பு!
சினிமா

தனுஷின் வாத்தி தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா - அடுத்த அதிரடி பட மிரட்டலான அறிவிப்பு!