மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகராகவும் திகழும் துல்கர் சல்மான் முன்னதாக பாலிவுட் இயக்குனர் முன்னணி பால்கி இயக்கத்தில் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST  திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

CHUP-REVENGE OF THE ARTIST திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக முதல்முறை வெப் சீரிஸில் களமிறங்கிய துல்கர் சல்மான் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸில் நடித்துள்ளார். 

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் சீதா ராமம் திரைப்படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். துல்கர் உடன் இணைந்து ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சீதா ராமன் திரைப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறது.

P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் சீதா ராமம் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சீதா ராமம் படத்தின் முதல் பாடலாக ஹே சீதா ஹே ராமா பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் சீதா ராமம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.