விமானத்தில் 5 மாதக் குழந்தை கைப்பையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கராச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய்க்கு வருகை தந்த பெண் பயணி ஒருவர், துபாய் விமானம் நிலையத்தில், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

5 month baby

இதில், சந்தேகமடைந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண் மணியின் கைப் பையை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த பையில், 5 மாத அழகான பச்சிளம் குழந்தை இருப்பது தெரியவந்தது.

5 month baby

அதிகாரிகள் பெண்மணியின் கைப் பையைத் திறந்ததும், அதில் குழந்தை அழகாக சிரித்துக்கொண்டே அதிகாரிகளைப் பார்த்துள்ளது. குழந்தையின் முகம் பட்டும் தெரியும் வகையில், மற்ற பாகங்கள் மறைக்கும் வகையில், குழந்தையின் மீது பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்துவிட்டு, அதிகாரிகள் குழந்தையை மீட்டனர்.

5 month baby

இதனையடுத்து, அந்த பெண் பயணியைக் கைது செய்த அதிகாரிகள், குழந்தை யாருடைய என்றும், எங்கிருந்து குழந்தை கடத்தப்பட்டது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றான். இதனிடையே, கைப் பையில், 5 மாதக் குழந்தை விமானத்தில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.