ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் திரௌபதி. பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட புகழ் இயக்குனர் ஜி.மோகன் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். நேற்று வெளியான இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்துள்ளது. சமுதாயத்தில் நடக்கும் போலியான திருமணங்கள், ஏமாற்றுத்தனமான காதல் அதனால் தொடரும் ஆபத்துக்கள் போன்றவை பற்றி இப்படம் பேசியதாக கூறப்படுகிறது. 

draupathy draupathy

தேசிய விருது பெற்ற டூ லெட் திரைப்படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்திருந்தார். 

draupathy draupathy

இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது படத்திலிருந்து கண்ணா மூச்சி ஆட்டம் பாடல் வீடியோ வெளியானது. வேல் முருகன் பாடிய இந்த பாடல் வரிகளை பட்டினத்தார் மற்றும் மோகன் எழுதியுள்ளனர்.