தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.

இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.

டாக்டர் படத்தில் இருந்து கடந்த மாதம் சில புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.குறிப்பாக படத்தின் நாயகி ப்ரியங்காவின் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரையும் க்ரஷ் லிஸ்டில் இணைத்து விட்டதாக தெரிவித்தனர்.இந்நிலையில் தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,போட்டோஷூட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டிற்கு புதிய க்ரஷ் ஒருவர் கிடைத்து விட்டார் என்று இந்த வீடீயோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by STAY HOME STAY SAFE (@priyankaarulmohan) on