தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்தில் சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், தீபாவளி கொண்டாட்டத்திற்காக வெளியூர் செல்பவர்கள் 25 ஆம் தேதி அன்றே சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பிவிடுவார்கள்.

special buses

ஏற்கனவே, எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்த நிலையில், அதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.

special buses

அதன்படி இன்று காலை தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. www.tnstc.in,Redbus ஆகிய இணையத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில், பலரும் நேரில் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.