மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார் இயக்குனர் விஜய்.இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் firstlook வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தலைவி என்று பெயரிட்டுள்ளனர் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் உருவான படத்திற்கு தலைவா என்று பொறித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்,நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.Vibri Media நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகி யார் மற்றும் ஷூட்டிங் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.