நடிகை ஹன்சிகா நடிக்கும் 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்தின் இயக்குனர் U.R.ஜமீல். நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்  இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹா திரைப்படத்தின் படப்பிடிப்புகள்  ஆரம்பிக்கப்பட்டது. 

பல காரணங்களால்  திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என்று சமீபத்தில் இயக்குனர் U.R.ஜமீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். போஸ்ட்புரொடக்ஷன் வேலையில் இருக்கும் மஹா திரைப்படம் OTT-யில் வெளியாவதாக சில தினங்களுக்கு முன்பு சிம்பு ரசிகர்கள் இணையதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் U.R.ஜமீல் தனது ட்விட்டர் பக்கத்தில் மஹா திரைப்படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகும் சிம்பு ரசிகர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் ஆதரவுக்கும் அன்புக்கு மிக்க நன்றி என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இயக்குனர் U.R.ஜமீல் தமிழில் தற்போது தந்தையாகி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த U.R.ஜமீலின் மனைவி நேற்று பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் U.R.ஜமீல் பதிவிட்டிருந்தார். எனவே சமூக வலைதளங்களில் பலரும் U.R.ஜமீனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.