கடந்த இரண்டு வருடங்களாக உலகத்தையே பல துயர சம்பவங்கள் தொடர்ந்து உலுக்கி மக்களின் வாழ்க்கையை உருக்குலைத்து வருகிறது.கொரோனா வைரஸ் ஒரு பக்கம் என்றால் , அதனை தாண்டி பல பிரச்சனைகள் வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது.

தங்களுக்கு நெருக்கமான உறவுகளை பலரும் பல காரணங்களால் இழந்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.பல பிரபலங்களின் எதிர்பாராத மரணங்கள் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவிலும் கடந்த சில மாதங்களாக பல எதிர்பாராத இழப்புகள் நேர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படங்கள் எடுத்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர்.தற்போது இவருக்கு ஈடுசெய்யமுடியாத ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

88வயதான இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் முத்துலக்ஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார் என்ற சோகமான செய்தி கிடைத்துள்ளது.இயக்குனர் ஷங்கருக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை ரசிகர்களும் பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கலாட்டா சார்பாக அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.