மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். 

Rathnakumar

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியின் காரணமாக ஒரு போலீஸ்காரர் தனியாக பெட்ரோல் பங்கில் அமர்ந்து சாப்பிடும் போட்டோ வெளியானது. இதையடுத்து பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்த இந்த போட்டோவில், அவரது மகளும், மனைவியும் அருகில் இருந்து சாப்பாடு பறிமாறுவது போல வடிவமைக்கப்பட்ட அந்த புகைப்படம் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Rathnakumar RathnakumarTweet

அப்பதிவில், கண்ணீர்தான் வருகிறது. இந்த கோடை காலத்திலும் 24 மணி நேரமும் நமக்காக உழைக்கும் இந்த போராளிகளின் மேல் பெரிய மரியாதை வருகிறது. கொரோனா வைரஸ் முடிவதற்குள் மனிதமும் மனிதாபிமானமும் வளரட்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.