மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை திரை துறைக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் இடம் பொருள் ஏவல். யுவன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.   

திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவான இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, அருள் தாஸ் ஆகியோர் நடித்திருப்பர்.   

தற்போது இப்படத்தை பார்த்த ராட்சசன் புகழ் இயக்குனர் ராம்குமார் அவரது ட்விட்டர் பதிவில் பாராட்டியிருக்கிறார்.

விரைவில் இப்படம் வெளியாகி மக்கள் செல்வனின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை படத்திற்கு பிறகு தனது குருநாதர் சீனுராமசாமியுடன் விஜய் சேதுபதி பணிபுரிந்த இப்படம் பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.