தமிழ் திரையுலகில் ஃபேமிலி ஆடியன்ஸ் விரும்பும் இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கதகளி, பசங்க 2 போன்ற தரமான படைப்புகளை தந்துள்ளார். விவசாயிகளின் பெருமையை உணர்த்தியது இவர் இயக்கிய கடைக்குட்டி சிங்கம். உறவுகளில் அருமையை உலகிற்கு எடுத்துக்காட்டியது இவர் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை. 

Director Pandiraj Updates On His Next Project

தற்போது ராஜசிங்கமங்களம் எனப்படும் RS மங்களத்தை மையமாக கொண்டு தனது அடுத்த படைப்பை தயார் செய்யவுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். படத்தின் டைட்டில் மற்றும் நாயகன் குறித்த அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Director Pandiraj Updates On His Next Project

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்தவர், சர்ப்ரைஸ் அறிவிப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். அந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கும் இமான் தான் இசையமைக்கிறாரா என்ற கேள்விகளுடன் உள்ளனர் சினிமா பிரியர்கள்.