தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ஆடியன்ஸின் நாடியறிந்து படம் இயக்குவதில் இவருக்கு நிகர் இவர் தான் என்று கூறலாம். ராஜா ராணி படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, தளபதி விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என மாபெரும் வெற்றிப் படங்களை படைத்தார். 

Atlee

தற்போது இயக்குநர் அட்லி தனது ஏ ஃபார் ஆப்பிள் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவத் தொற என்ற படத்தை தயாரித்திருந்தார். அதைத்தொடர்ந்து அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஏப்ரல் 12)  மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

atleeproductions

வெளியான போஸ்டரில் தெரியும் முகத்தை பார்க்கையில் நடிகர் அர்ஜுன் தாஸ் போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இயக்கம் அல்லாது தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அட்லீ. இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் வைத்து படம் செய்வதாக கூறப்படுகிறது.