கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து விக்ரம் 58,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

Dhruva Natchathiram Post Production Works GVM

ஐஸ்வர்யா ராஜேஷ்,ரித்து வர்மா,பார்த்திபன்,சிம்ரன்,திவ்யதர்ஷினி,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Ondraga என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Dhruva Natchathiram Post Production Works GVM

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அடுத்த 60 நாட்களில் இந்த வேலைகள் நிறைவடைந்து படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என்று இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.