ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

harishkalyan

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

harishkalyan harishkalyan

இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்கள் முன் நடைபெற்றது. தற்போது நீதான் வேணுமடி பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சரத் சந்தோஷ் மற்றும் ராஜன் செல்லையா பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.