தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்ததாக தனுஷ் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இந்த படம் வரும் ஜூன் 18ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

அத்ராங்கி ரே படத்தின் படப்பிடிப்பை லாக்டவுனுக்கு முன்னரே முடித்திருந்தார் தனுஷ்.தொடர்ந்து D43 படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது பிரம்மாண்ட ஹாலிவுட் படமான The Grey man படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.விரைவில் தனுஷ் இந்தியா திரும்பவுள்ளார்.

தனுஷ் தனது புதிய லுக்கில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது The Grey man பட கெட்டப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த புகைப்படத்தில் கோலிசோடா ஒன்றுடன் ரௌடிபேபி பாடலுக்கு இந்த சோடா தான் Inspiration என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Dhanush (@dhanushkraja)