பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் கொரோனா காரணமாக நேரடியாக  Netflix தளத்தில் நேற்று வெளியானது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புதிய வெர்ஷன் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அனிருத் பாடி சூப்பர்ஹிட் அடித்திருந்த இந்த பாடலை தற்போது படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடி ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷனை சந்தோஷ் நாராயணன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.